வருக வருக தனலட்சுமி தெய்வமே

தனலட்சுமி!
இது ஒரு பெண் கடவுளின் பெயர்!
எட்டு லட்சுமிகள்
பெண் கடவுளர்!
அவர்களில்
தனலட்சுமி ஒரு கடவுள்!
தனம் என்றால் செல்வம்!
ஐஸ்வர்யங்களில் தலையாயது செல்வம்!
அந்த செல்வத்தை அருள்வதால்
அவர் தனலட்சுமி என பெயர் பெற்றார்!
ஒரு மனிதன் வாழவோ --- அன்றி
ஒரு தேசம் வளரவோ
செல்வம் அவசியம்!
தேடி வரும் செல்வத்தை
அவமதிக்காதீர்!
மதிக்காதோர் இல்லத்தில்
தனலட்சுமி நுழைய மாட்டாள்!
நேர்மையின்றி வரும் செல்வத்தை
அனுமதிக்காதீர்!
அதை நிலைக்க விட மாட்டாள்!
ஹோமம் அல்லது பூஜையின் முடிவில்
செய்யும் வேண்டுதல்களில்
தனம் முதலிடம் பெறுகிறது!
வணிகம் தொடங்க தேவையான
முதலை மூலதனம் என்கிறோம் !
பெருந்தனக்காரர் என்றால்
பெரிய பணக்காரர் என்று பொருள்!
சீதனம் என்றால் சீர் வரிசை!
ஆக ---
தனம் என்ற பெயரின் அடிப்படையில்
எத்தனை வார்த்தைகள்!
தனலட்சுமியை வணங்குவோம்!

எழுதியவர் : ம கைலாஸ் (12-Oct-16, 11:10 pm)
பார்வை : 251

மேலே