குங்கும முத்தம்

கேள்விக் கூன்களிலிருந்து
உதிரும் சிறகுகள்
ஆன்மாவிலிருந்து
தொலைந்து போனவர்கள்..

தொலைந்த காயங்களின்
குங்கும முத்தம்
பொறுமை வளர்த்து
பெருமை வீழும்..

கருணை மரங்கள்
யார் நட்டாரோ..
இளைப்பாரும்
போதெல்லாம்
அன்பின் வாசை..

கருணை மனிதர்கள்
இப்போது இல்லாதது
யார் பிழையோ..

பிழை பேர்வழிகள்
பிழைக்க தெரியாத
வேறும் பைத்திய
காரணங்கள்..

இருள் மொய்கின்ற
இவ்வாழ்வின்
பேரொளிக்காக
பெரும் போராட்டங்கள்..

போர்களத்தில்
புல்லாங்குழல்
எடுபட போவதில்லை..
ஆயினும்
அது ஒருபோதும்
இசையைக்
கெடுப்பதில்லை..

காலம் கணியும்
புல்லாங்குழலிடம்
பேரிரைச்சல்
தோற்றுப் போகும்..

மழைவிட்ட மேகம்
களைந்து போனாலும்
வான் கொண்ட
பெருங்கனவு
இடிந்து போகாது..

புன்னகையெல்லாம்
புதைத்து பூக்கிறது
கண்ணீர் ரகசியம்..

வெறுமையெல்லாம்
புதைத்தழிந்து
புது சரித்திரம் படைப்பதே
வெற்றியின் ரகசியம்.

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (12-Oct-16, 8:42 pm)
Tanglish : kunkuma mutham
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே