திரும்பிவா வசந்தம் உன்னிடம் 555

தோழனே...

வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று
மலை உச்சியில் நின்று சொல்பவனே...

சிந்தித்துப்பார் உன்னை
கொடுமைப்படுத்தியது யாருமில்லை...

உனக்கு நீயேதான்...

நீ வெறுத்து செல்லும் விஷயங்கள்
எல்லாம் வேடிக்கையானவை...

காதல் தோல்வியா கவலை படாதே
காதல் என்றாலே போராட்டம்தான்...

தோல்வியை தாங்கிக்கொள்ளும்
பக்குவம் வேண்டும் முதலில்...

தேர்வில் தோல்வி என்றால் மீண்டும்
முயற்சித்து வெற்றிகொள்கிறாய்...

வாழ்க்கையும் அப்படிதான்
நீ முயற்சியோடு எழு...

எளிதாக உனக்கு கிடைப்பது எல்லாம்
நீ எளிதாக மறந்துவிடுவாய்...

போராடி நீ பார் காதல் மட்டுமல்ல
சிகரத்தையும் நீ எளிதாக அடைவாய்...

அரபு நாடுகளில் தொழிலாளியாக
வாழ்ந்துபார் வாழ்க்கையை...

அப்போது புரியும்
வாழ்க்கை என்னவென்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Oct-16, 8:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 246

மேலே