காதல் எனும் நதியினிலே

என்னவென்று நான் சொல்ல
உன் பிரிவினை தாங்கிக்கொள்ள
பட்டமரம் போலானேன்
நான் பாதியில் நின்ற தேரானேன்...

நித்தம் நித்தம் மாறுகின்ற உலகினிலே
என்றும் மாறாதது நம் இனிய நட்புறவே
புத்தம் புது காலையிலே நான் கண்விழித்து பார்ப்பது உன் முகமே
தூக்கம் கலைந்து நான் விழித்து தூங்கும்
போது என் நெஞ்சிக்கு வருவது உன் நினைவே...

ஓராயிரம் கால்தடங்கள் பதிந்த மண்ணிலே
உன் ஒரு ஜோடி பாதசுவடை நான் அறிவேன்
ஆயிரம் பூக்கள் வாசத்தின் நடுவே
உன் சுவாசகாற்றை நான் அறிவேன்
என் விழிமூடி நீ எனை தொட்டாலும்
உன் தொடு உணர்வை நானறிவேன்...

நான்காண்டு நம் காதல் பயணத்தை
நீ முடிக்க நினைத்தது ஏனோ
எனக்கு மலர் வளையம் வைத்து எனை
வழியனுப்ப தானோ...
நீயே என் வாழ்க்கை என்று
நான் கண்ட கணவெல்லாம் வீனோ..

என் மனதில் உன்னை சுமந்து
வாழ்க்கையில் வேரோருவளை
கரம்பிடிக்க என்னால் முடியாது
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...?
பாதி நாட்கள் உன்னோடும் மீதி நாட்கள்
உன் நினைவோடும் வாழலாம்
என நினைத்தேன் அதற்க்கும் வழியில்லை
ஏனென்றால் நீ அடுத்தவனின் சொந்தமாவாய்...

என் காதலுக்கு மலர்வளையம் வைத்து
நீ மலர்மாலை சூட்டிக்கொள்கிறாய்...
நீ எங்கிருந்தாலும் வாழ்க

எழுதியவர் : செல்வமுத்து.M (13-Oct-16, 8:50 am)
பார்வை : 343

மேலே