காதல் வலி

கடும்சொற்களை உதிர்த்து கல்நெஞ்சகத்தை தகர்த்து
முடிவுக்குக் கொண்டுவந்த காதலை அவள் முறையின்றி விலக்கியதன் வினையினால்...

என் நாளங்களில் நிலையின்றி எந்நேரமும்ஓடி
உதிரத்தொடங்கிய கடைதுளி செங்குருதியும் விடைபெறத் துணிந்த பொழுதாகிப்போனது...

மென்தென்றலின் அரவணைப்பில் இன் காதலைத் தழுவிக்கொண்ட என்னவளிடத்தே
மரபுமீறிய சொல்லாடலில் சிதறிய சிலவார்த்தைகள் எனை வறுமைக்குள்ளாக்க...

துன்பம் துயரமெதுவென அறியாது அயர்ந்து
துவண்ட மனதோடு ஏதோவொரு தூரத்து மண்ணில்நான் மடியத்தொடங்க...

காற்றுவழிப் பயணித்த உதிர்ந்த இலைகளின் கரங்களை எனதுயிர் பற்றிக்கொள்ள
காலனவனின் கண்களிடம்தப்பி கண்மாய்கரையினில் எனதுடல் ஓய்வெடுக்க...

அடர்ந்த புதர்களில் குடிகொண்ட வரிக்கரையான்கள் எனதுடலை பங்கிடப் பாடுபட
அவ்வழிப் பறந்த பருந்தொன்று ஒற்றைப்பிடியில் எனைக் கவ்விக்கொண்டுப்போக...

இறைகிடைத்த மகிழ்ச்சியில் உறைவிடம்நோக்கி பருந்தும் பறந்துசெல்ல
கரைபடிந்த எனதுடலில் கசியும் துர்நாற்றம் தொடர்ந்துவீசிட ...

புள்ளிமானாய் துள்ளிவந்த புயலொன்று எனைக்கொண்டு
கள்ளிச்செடியோரம் மறைத்துவிட...

மண்ணுள் விளைந்த மண்புழுக்களின் மென்வாசனையில் ஒருவழியாய்
மீண்டுத் திரும்பி மீதமானது எனதுயிர்...

உயிர்கலந்த உடலுடன் உணர்வுகளைக் கலைத்துவிட்டு மீண்டும்
பயிர்விளையும் புகழிடம்நோக்கிப் பயணிக்கத் துவங்கினேன்...

காதலால் விளைந்த கரடுமுரடான பாதையினில்சிக்கி
காலவரையறை நான்மறந்ததால்தான் களவுபோனது என்காதல்...

அறிவிப்பற்ற அடைமழையாய் அவளதுநினைவுகள் எனைநனைக்க
அதிகாரம்கொண்ட சதிகாரியை அப்போது எப்படி நான்மறக்க...?

அவளைக் காட்டிலும் போலி காதலி அவணியில் இல்லை, ஆயினும்
அவள் கொடுத்ததைவிட சிறந்ததொரு அனுபவம் எனைத்தவிர இங்கு எவருக்குமில்லை...

#தோல்விகளும்_தோள்கொடுக்கும்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (14-Oct-16, 10:22 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 444

மேலே