காதல் பிரிவின் வலி
பெண்ணே...!
நீ இன்றும் நிலவாகவே இருப்பதனால்தான்
என் காதலும் இருளாகவே இருக்கின்றது...
உனைப்பற்றியே வரைத்து.. வரைத்து..
என் வரிகளுக்கே உன்மேல் காதல் வந்துவிட்டது...
கடந்த நாட்கள் நினைவிருக்கிறதா...!
நீ கடந்து செல்லும்வழி நானும்..
நான் கடக்கும்வழி நீயும் அன்று காத்திருந்தோம்...
ஆனால் நாம்..
கடைசிவரையில் சந்திக்க முடியவில்லை..
காதல்தான் நம்மைச் சந்தித்தது...
இத்தனை இனிமையான காலம்
ஓடி ஒளிந்ததுதான் எப்படியோ...!
விட்டுக்கொடுக்கும் நாகரிகம் கருதி நானும்..
காதலுக்கு துரோகம் செய்த நீயும்...
நீ மௌனம்காட்டி எனை வதைத்த பின்பும்
நான் வரைவதெல்லாம் சிறு ஆறுதலுக்காகத்தான்...
ஒரு ஆடவனின் வாழ்க்கை அழிந்தால்
அது சிறிய அத்தியாயம்தான்...
ஆனால்..,
ஒரு நங்கையின் வாழ்க்கை அழிந்தால்
அது மிகப்பெரிய சுமைகொண்ட சுவடி...
இன்று என்மனம் சீரழிக்கப்பட்டுவிட்டது...
இருக்கட்டும்...
எந்தன் காதல் அத்தியாயம் உந்தன் காலச்சுவடியில்
ஏதோவொரு பக்கத்திலாவது இடம்பெற்றிருக்கிறதா...?

