வேசம்

புன்னகையை உனக்களிக்க
பூமாலை நீ எனக்களிக்க

அன்பொன்றை நான் அளிக்க
அருவருப்பாய் நீ வெருக்க

சந்தோஷமே நீ எனக்காய்
சந்தேகமாய் நான் உனக்காம்??

கண்களிளே வைத்தேனேஅவள் பிம்பம்
ஒன்று மட்டும்

இதயத்தை பிய்தெறிந்தாள்
என் அன்பு வேண்டாமென்றும்...

கண்ணீரில் கவிதை என நான் ஏதோ கிறுக்கி விட

கடைசியில் புரிந்து கண்டேன் அவள் அன்பும் ஒரு வேசம் என

கண்டதெல்லாம் கனி எனத்தான் பகல் கனவு கண்டேனோ????

இனிமேலும் நான் உனைத்தான் என் வாழ்வென நினைப்பேனோ.???

போதுமென தோன்றியது பொல்லாத ஆசைகளும்...

புத்தகமாய் அவள் நினைவு எந்த ஒரு பக்கத்திலும்

வேண்டாம் என
எரிக்கின்றேன் அவள் இன்பம் காண மட்டும்

எழுதியவர் : sanjeev(psycho11) (14-Oct-16, 1:32 pm)
சேர்த்தது : சஞ்சீவ்
Tanglish : vaesam
பார்வை : 434

மேலே