பார்வையில் சம்மதம் கேட்கும் உன் விழிகள் 555

நிலவே...

நீ புத்தாடை உடுத்தும் நாட்களில்
நான் வெளியே சென்றிருந்தால்...

நான் வரும்வரை
எனக்காக காத்திருப்பாய்...

என்னிடம் அழகை கேட்டு
புன்னகை புரிவாய்...

நீயும் நானும் சேர்ந்து
போகும் நாட்களில்...

உன் தோழிகள் என்றேனும்
உன்னை அழைத்தாள்...

பார்வையில் சம்மதம்
கேட்டு போவாய்...

மீண்டும் என்னிடம் வரும் வேலை
மௌனம் கொள்வாய் ஏன்...

நாம் நண்பர்களாகவும்
பழகவில்லை...

காதலர்களாகவும் அன்பை
பரிமாறிக்கொள்ளவில்லை...

உனக்கும் எனக்கும்
இருக்கும் உறவு என்ன...

சொல்லாத காதலா இல்லை
சொல்ல துடிக்கும் காதலா...

ஆழ்மனதிற்கு
தெரியவில்லையடி எனக்கு...

உயிரான உறவு
எதிரெதிர் வீட்டில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Oct-16, 7:30 pm)
பார்வை : 554

மேலே