களவும் கற்று மற கற்றபின் நிற்க அதற்கு தக

வெற்றியை மட்டும் நோக்கும் இவர்களுக்கு
திறனும் அறனும் தெரியாதுதான்.
பணம் தான் வாழ்க்கை என்றானபின் இவர்களுக்கு
பாவம் தாபம் கூட சாதாரணம் தான்.

களவும் கற்று மற சரிதான்,
நேர்வழி சென்றால் வாழ்க்கை
நெடுந்தொலைவு என்றானால்
அவ்வழி எவர் செல்வர்?

நல்லதை கற்று நடக்க இங்கே யாரும் தயாரில்லை,
மாற்று வழியில் செல்லத்தான் எல்லோருக்கும் மனோபாவம்.
அப்படிக்கற்றுத்தான் இங்கே எல்லோரும் இன்று
'நிற்க அதற்கு தக' என்றானார்கள்.

இனியாவது யாரும் நல்வழி காட்டாதீர்கள்.
தண்ணி குடிக்க துணிந்து தான்
உப்பு தின்று தீர்க்கிறார்கள். ஏனெனில்

உப்பு தின்றவன் எல்லாருமா
இங்கே தண்ணி குடிக்கிறார்கள்?
தப்பு செய்தவன் எல்லாருக்குமா
இங்கே தண்டனை கிடைத்துவிடுகிறது?

எழுதியவர் : செல்வமணி (16-Oct-16, 11:43 pm)
பார்வை : 184

மேலே