வயோதிபம்
பச்சைப்பசேலென
பாசிப்படர்ந்த நடைபாதையில்
தள்ளாடும் வயது
முதுகில் குச்சிகளுடன்
செல்வது தான்
விதியின் சதியா?
பல்லாயிரம் பேரை
கொன்று வீழ்த்தியது
ஈழப்போர்
அழிந்ததில் இவள்
பெற்ற பிள்ளைகளுமே...!
வடுக்கள் அழிந்த பாதையை
தொலைத்தவளாய் நிற்கின்றாள்
நம்பிக்கையை இழக்காதவளாய்...
இளமை தொலைந்து விட்டால்
முடமாகிப் போவாளா என்ன?
நீண்டு வீசிய விரக்திக்காற்று
மனதில் பெய்த சாரல் மழை
தன்னை நனைத்துப் போனாலும்
உழைத்தே சாப்பிடுவேனென
செல்கின்றாள் தன்மானத்துடன்.....!