என் மனதின் வலி

என் மனதின் வலி....

அனைத்தும் இருந்தும் அநாதையாய் நிற்கிறேன்
உயிர் என் உடலில் இருந்தும் நடை பிணமாய் திரிகிறேன்
என் உள்ளத்தின் வலிகளை நான் அறிந்திருந்தும்
அதை சொல்லி அழுதிடவும் ஒரு உறவற்று தனிமையில்
நானும் தவிக்கிறேன்...

அகத்தில் ஆயிரம் வலியிருந்தும் முகத்தில் புன்முறுவல்
பூக்கிறேன்....
என் முகத்தை நானும் மறைத்தே முகமூடி அணிந்து நடிக்கிறேன்
தாயவள் என் அருகில் இருந்தும் தாய்மடி தேடி துடிக்கிறேன்
எனை தாங்கிட யாருமின்றி மடி தேடும் மழலையாய் நானும்
தினம் தினம் கண்ணீரில் கரைகிறேன்...

தாய்மடி தந்து எனை தாங்கிடும் தலையணையோடு
என் விடியா இரவுகளை நானும் கழிக்கிறேன்...
யாரிடமும் சொல்லிட முடியா என் வலிகளை
அதனிடம் சொல்லி நானும் என் விழிநீரில் நனைகின்றேன்..

சுயநலவாதி என்று நானும் பட்டம் பெற்றுவிட்டேன்
மனநோயாளி எனும் பட்டமும் எனக்கு கிடைத்துவிட்டால்
மனதே இல்லாதவர்களோடு இருப்பதை விட
கள்ளம் கபடமற்ற அவர்களோடு நானும் ஒருத்தியாய்
ஐக்கியமாகிடுவேன்...

யாருமற்ற தனி உலகம் நானும் சென்றிட வேண்டும்
அங்கே என் வலிகள் அனைத்தையும் குழி தோண்டி
புதைத்திட வேண்டும்...
என் வலிகள் புதைந்த இடத்திலேயே நானும்
புதைந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிட வேண்டும்..
அது இந்த நொடியே நடந்தாலும் உதட்டில் சிரிப்போடே
என் உயிரை நானும் துறந்திட வேண்டும்....

எழுதியவர் : அன்புடன் சகி (16-Oct-16, 8:32 pm)
Tanglish : en manathin vali
பார்வை : 2257

மேலே