எனக்கு தா இறைவா

பகிர்வது அன்பாயிருந்தாலும்
பகிர நல் உள்ளம் கொடு இறைவா
தருவது பணமாயிருந்தாலும்
தன் நிலை இறங்க மனம் கொடு இறைவா
யாசகம் கேட்பது யாராயிருந்தாலும்
யார் என வினவாமல் அவர் குறை கேட்க செவி கொடு இறைவா
உதவி என வருவோர் எவராயினும்
உருகும் நல் மனம் தா இறைவா
உடைந்த உள்ளத்தோர் தெரிந்திடினும்
உவப்புடன் உரையாட நேரம் தா இறைவா
கதியற்றோர் கண்கலங்கிடின்
காணும் யான் இளகிட இரக்கம் தா இறைவா
தேவையிலிருப்போர் அறிந்திடின்
தேடி தேற்றிட தெம்பை தா இறைவா
விழியிழந்தோர் காணப்படின்
வழி காட்டும் விளக்காக எனை மாற்று இறைவா
தனிமை சிறையில் கதறுவோரின்
அருகமர்ந்து உன் உடனிருப்பை உணர்த்த மொழி கொடு இறைவா
சிறியோரும் வறியோரும் உயர்ந்திடவே
சீர் ஊக்கம் தா என்இறைவா
ஜோதியாம் உமை மறந்தோர்
திரும்பிட எனை பாலமாக்கு இறைவா
ரோஜா மலர் நறுமணம் போலவே
என் பணியும் வாழ்வும் வாசம் வீச
வரம் தந்திடு இறைவா ! !