வெள்ளைக்காகிதம்

வெள்ளைக்காகிதம்....

இருள் சூழ்ந்த என் வாழ்க்கையில்
ஒளியேற்ற வந்தது தீபமாய்...
கறை படிந்த என் வாழ்க்கை
பக்கங்களை வெள்ளையாக்கிட
எனக்கு கிடைத்தது
வெள்ளைக்காகிதங்களாய்....

என் மனதின் வலிகளை
நானும் கரைத்தேன் கண்ணீராய்
காகிதத்தின் மடியிலே...
என் இதயம் வடிக்கும் உதிரத்தை
என் எழுதுகோலின் மைத்துளி
வழியே சிந்தினேன்...
வெள்ளையாக இருந்த என்
வெற்றுக்காகிதங்கள் மீதிலே...

வெள்ளையாக இருந்த
காகிதங்களை நனைத்தது..
என் விழிநீர் மழை...
நனைந்த காகிதங்கள் என் மனதில்
எரிந்து கொண்டிருந்த அக்கினியை
அணைத்து என் வலிகளையும்
சற்று குறைத்து எனையும் குளிர்வித்தது..

மனதின் ஆறாத ரணங்களை
ஆற்றிடவே...
வெள்ளைக்காகிதங்களை
உதிரத்தின் நிறமாய் நானும்
உருமாற்றிக்கொண்டேன்....
வானளவு காகிதங்களை என்
கைவண்ணத்தால் நிரப்பியும்...
வலியோடே மலர்கிறேன்
என் கல்லறை மேலே
காகிதப்பூவாக நானும்....

எழுதியவர் : அன்புடன் சகி (16-Oct-16, 10:09 am)
பார்வை : 165

மேலே