நிலவொளியில் மிளிரும் காதல்

சாந்தமான நிலவொளியில்
உன் சாந்தமான முகம் பார்த்து,
என்னைச் சார்ந்த உன் இதயம்
சாந்தமாக துடிக்க,
அந்நிகழ்வை படம் பிடித்த என் கண்கள்
"மின்மினி"யின் அழகையும் தவிர்த்து
உன்னை நோக்க,
சாந்தமான உன் இதழின் புன்சிரிப்பு
ஆயிரம் அர்த்தங்களை பறைசாற்றும்...
அழகே!..
மின்னுவது மின்மினியா
அல்லது
உன் கண்களில் தெரியும் நிலவொளியா !!!

எழுதியவர் : மதியழகன் (17-Oct-16, 6:42 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 164

மேலே