தேடுதல்

காணாத கனவு நீ
அதைத் தேடாத கண்கள் நான்!

எட்டாத உயரம் நீ
அதைத் தொடாத சிறுவன் நான்!

பார்க்காத தேசம் நீ
அதைக் கண்டுபிடிக்காத கொலம்பஸ் நான்!

செதுக்காத சிற்பம் நீ
அதை வடிக்காத சிற்பி நான்!

வரையாத ஓவியம் நீ
அதைத் தீட்டாத ஓவியன் நான்!

கட்டப்படாத மாளிகை நீ
அதை வடிவமைக்காத கலைஞன் நான்!

அறியப்படாத உண்மை நீ
அதை அறியாத பொய்மை நான்!

எழுதப்படாத காவியம் நீ
அதை எழுதாத கவிஞன் நான்!

தெவிட்டாத இன்பம் நீ
அதை ருசிக்காத துன்பம் நான்!!!!!

எழுதியவர் : சங்கர்லால், மதுரை. (17-Oct-16, 6:53 pm)
Tanglish : theduthal
பார்வை : 140

மேலே