வாகனப் புரவி
என்னைச் சுமந்து
தூக்கிக் கடந்து
நினைத்த இடம் அழைத்துச் சென்று
எண்ணத்துக்கு விரைவு நகர்த்தி
உராய்வுகளில் உடல் மெலிந்து
ரத்தமாய் பெட்ரோல் குடித்து
எச்சமாய் புகை கக்கி
என்னோடு திசை படர்ந்து
எனக்கான வேகம் பறந்து
எத்தனை உத்வேகம்
உன்னால் எனக்கு
எத்தனை உற்சாகம்
உன்மேல் என்னுள்
என் இரு சக்கர
வாகனக் குதிரையே...
எத்தனை முறை
உதைத்திருக்கிறேன்
எப்படி ஒரு அனலில்
உன்னைத் தனி
நிறுத்தி இருக்கிறேன்
இருந்தும்
எப்போதும்
எனக்காகவே
நீ உழைக்கிறாய்...
இயந்திரப் புரவியே
பாடு பொருளாய்
நீ
பாடப்பட்டதால்
ஒரு சிறு நன்றியும்...

