ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள தனலட்சுமிக்கு,

அன்பு மனைவி தனலட்சுமி
என் வாழ்வில் வந்த மஹாலட்சுமி

வந்தேனே உன்னை விட்டு வெளிநாடு
என் வாழ்வின் சொர்கம் அது நம் வீடு

கனவில் கண்டேன் உன் முகம்
அதுவே இன்று என் சுகம்

அன்று என் வார்த்தைகள் முழுவதும் என் தனம்
இன்று என் நினைவுகளால் உனக்கு வந்தனம்

இங்கு கைகள் முழுவதும் பெரு பணம்
ஆனால் நிம்மதி இன்றி என் மனம்

அழகே உந்தன் புன்னகை
அதற்கு ஈடாகுமா இன்று நான் தரும் பொன்நகை

தேவதையே உந்தன் அழகிய விழிகள்
அதை காணாத என் கண்ணில் கண்ணீர் துளிகள்

அன்புடன் நீ தரும் முத்தம்
அதை எண்ணியே வாழ்கிறேன் நித்தம்

கண்டவர் வியக்கும் அதிசய பிறவி
உன் கூந்தலில் கண்டேன் அழகிய அருவி

வில்லென தோன்றும் உன்திரு புருவம்
சில்லென காற்றில் நீ வாடை பருவம்

கண்களில் கொண்டாய் காதல் வசியம்
அதை கண்டதும் தீரும் வாட்டிடும் பசியும்

தொட்டதும் சிவக்கும் உனதிரு செவிகள்
தொட்ட என் மனதில் பிறந்திடும் கவிகள்

உன் மூக்கின் வழியே சுவாச காற்று
அது குழல் வழி வந்த இசையின் ஊற்று

வண்டுகள் மறந்தன பூக்களின் இதழ்
உன் தேன் சுவை இதழ்களை கண்டது முதல்

அழகிய வரிசையில் பளிச்சிடும் பற்கள்
அவை சிற்பிகள் செதுக்கிய வைர கற்கள்

தேனதில் ஊறிய முக்கனி சுவையும்
உன் எச்சிலில் ஊறிய நாக்கின் முன் குறையும்

ஞாயிறு ஒளியின் முன் நிலவது அஞ்சும்
இவ்விரண்டையும் மங்கையின் முக பொழிவது மிஞ்சும்

நல்லிலக்கணம் கொண்ட கவிஞனின் எழுத்து
சிறு அணிகலன் பூண்ட அழகியின் கழுத்து

பளிச்சென ஜொலித்திடும் பட்டுடல் தேகம்
அழகு மழை தனை பொழிந்திடும் மெல்லிய மேகம்

மற்றவை கண்டால் வந்திடும் மோகம்
அவை கொண்டவன் எனக்கு கிடைத்திட்ட யோகம்

விரைவில் உன்னை காணும் நாளை எதிர் நோக்கி...

உன் அன்பு கணவன்,
கமல் ராஜ் .

எழுதியவர் : கமல் ராஜ் (18-Oct-16, 1:34 pm)
பார்வை : 201

மேலே