காதல் வியர்வை

பவழ மல்லி பூக்கள்
பதுங்கி பதுங்கி பூக்கும்

இவளின் புருவத்தில் அரும்பும் வியர்வை
துளிகளிடம் போட்டியின்றி தோற்கும்

நெற்றி பொட்டில் சந்தன கீற்றை
நனைத்து ஐஸ்வர்யம் கூட்டும்

கன்னம் வழிந்து கழுத்தில் விழுந்து
அழகு ஊர்கோலம் போகும்

எழுதியவர் : கார்முகில் (18-Oct-16, 6:19 pm)
Tanglish : kaadhal viyarvai
பார்வை : 215

மேலே