அக்கா

அக்கா
=======
அவள் தன் உலகத்தை
என் வசம் தந்தாள்,
அவள் அல்ல, என் கடவுளாக ....

அவள் தன் பரிவை
என் மேல் காட்டினாள்,
அவள் அல்ல, என் தோழியாக....

அவள் தன் பாசத்தை
என் மேல் வைத்தாள்,
அவள் அல்ல,
என் தந்தையாக....

அவள் தன் ஆசை
என் ஆசை ஏற்றாள்,
அவள் அல்ல, என் அன்னையாக....

அவள் அல்ல அவள்....
என் அக்கா!!!!!!!!!!!!

மனோஜ்...

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 1:51 pm)
Tanglish : akkaa
பார்வை : 8508

சிறந்த கவிதைகள்

மேலே