அடுத்த வீட்டு அக்கா

அடுத்த வீட்டு அக்கா
=================

ஊர் விட்டு
ஊர் வந்தேன்,
என் குடும்பம் வாழ...

பாசம் இன்றி
நான் தவித்தேன்,
எனை கேட்க ஆளில்லை...

பந்தம் இன்றி
நான் வாடினேன்,
எனை பார்க்க ஆளில்லை...

உணவின்றி
நான் சோர்ந்தேன்,
உணவளிக்க ஆளில்லை...

புது வீடு மாறினேன்,
ஒரு மாற்றத்திக்காக....

அடுத்த வீட்டு அக்கா,
தம்பி என்றாள்,
புது சொந்தம் பெற்றேன்.....

சாப்பிடு என்றாள்,
என் பசி தீர்ந்தது....

என் தாயின் புண்ணியம்,
அடுத்த வீட்டு அக்கா...

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 1:48 pm)
Tanglish : atutha veettu akkaa
பார்வை : 133

மேலே