உனக்காக
உனக்காக...
===========
உனை நான் ஒரு போதும்
பிரியாத நிழலாக,
உன் அருகில் என் வாழ்வை
நான் தொடர வரம்
வேண்டும் பெண்ணே....
எனை நீ சிசுவாக
உன் மடி மீது
தவழ்ந்து ஆட ,
என் தாயாக
நீ தொடர வரம்
வேண்டும் கண்ணே...
தேன் சுவைக்கும்
வண்டாக நான் மாறி
உன் இதழ் பூவில் தேன்
சுவைக்க
நீ எனக்கு வரம்
கொடுக்க வேண்டும்
பெண்ணே...
உன் இதயம்
துடிக்கும், ஒவ்வொரு
உயிர் துடிப்பும்
உனக்காக நான்
துடிக்க வரம்
வேண்டும்
கண்ணே..
மனோஜ்