செல்ல மகள்

கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பில்
உள்ளம் கொள்ளைப் போகுதே
முல்லையிவள் முத்துச் சிரிப்பில்
தொல்லை விட்டுப்போகுதே
அல்லியிவள் அன்புச் சிரிப்பில்
கள்ளிப்பூவாய் முகம் மலருதே..!
புன்னகைப் பூத்து-என்
கன்னத்தை வருடி தூங்கவைக்கும் அன்னையும் நீயே..
வேலைதரும் அயர்ச்சி போக-என்
காலை அமுக்கி மகிழ்ச்சி தரும்
ஏழையிவன் தெய்வமும் நீயே..
விஜயகுமார் வேல்முருகன்