தீரசு சூரசு
தீரசு, சூரசு இங்க வாங்கடா செல்லங்களா.
@@@@@@@@
யாரு பாட்டிம்மா தீரசு சூரசு?
@@@@@@
வாடி பொன்னி, வா, வா. என்னோட மூத்த மவன் கண்ணப்பன் வெளிநாட்டில இருக்காரான்னு சொன்னன் இல்லையா?
@@@@@@@
ஆமாம் பாட்டிம்மா. அதப் பத்தி பல தடவ சொல்லிருக்கறீங்க. நா பக்கத்தூருக்காரி. நாங் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து மூணு வருசந்தாம் ஆகுது.
@@@@@
ஆமாண்டி கண்ணப்பன் கல்யாணம் பண்ணீட்ட கையோட வெளிநாட்டுக்குப் போனவன் ஏழு வருசங் கழிச்சு இப்பத்தாண்டி என்னப் பாக்க குடும்பத்தோட வநதிருக்கறான். அவனோட ரட்டப் பசங்க பேருதான் தீரசு சூரசு.
@@@@@@
பாட்டிம்மா, நீந்க எந்தப் பேரா இருந்தாலும் அதுக்கு என்ன அர்த்தம்னு கேப்பீங்களே, உங்க ரட்டப் பேரங்க பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டீங்களா?
@@@@@@
நானும் கண்ணப்பங்கிட்ட பலதடவ கேட்டண்டி போன்னி. " பசங்க பேரு தீரஜ் - சூரஜ். இந்திப் பேருங்கதான். எண் கணித ஜோதிடப்படி நாங்க வச்ச பேரு. அந்தப் பேருங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுட்டு ஆராச்சி பண்ணி டாக்டர் பட்டமா வாங்கப் போறீங்க?" எம் மூக்க ஒடைக்கற மாதிரி கோவமாப் பேசிட்டாண்டி கண்ணப்பன்.
@@@@@@
கண்ணப்ப மாமன் சொல்லாட்டி என்ன அத விடுங்க பாட்டி. நானும் பட்டதாரி பொண்ணுதான். என்னோட வீட்டுக்காரரும் பட்டதாரிதான். அவருக்கு அரசாங்க வேல கெடச்சும் அதை வேணான்னு சொல்லிட்டு அவருக்குச் சொந்தமான பத்து காணி நெலத்தில விவசாயம் செஞ்சிட்டு இருக்கறாருங்கறது உங்களுக்கும் தெரியும் பாட்டிம்மா. எங்கிட்ட இணைய வசதி உள்ள செல்பேசி இருக்குது. அதில உங்ககிட்ட பேசிட்டு இருக்கறபோதே உங்க பேரங்களோட பேருக்கான அர்த்தங்களத் தெரிஞ்சிட்டேன் பாட்டிம்மா.
@@@@@@
பொன்னி சீக்கரஞ் சொல்லுடி.
@@@@@
பாட்டிம்மா, சூரஜ்-ன்னா சூரியக் கடவுள். அத நல்ல தமிழ்ல சொல்லடணும்னா கதிர் கடவள்/கதிர் இறைவன்.தீரஜ்-ன்னா ஆறுதல், பொறுமை.
@@@@@@@
அம
அடி ஆத்தி, அவ்வளவு கசட்டப்பட்டு அந்த இந்தி பேருங்களையா வைக்கறது. அந்தப் பேருங்களுக்கு பதிலா பொறுமை/ ஆறுதல், கதிர் கடவுள்- ன்னு தமிழ்ப் பேருங்கள வச்சா கேவலமா?😢