நிலவு மகள்

இவள் கண்களில்
மை வைத்திருக்கும்
அழகைப் பார்க்கும்போது
ஐந்து லட்சம் மொய்
வைக்கத் தோன்றுகிறது .

இவள் நிலவில்
வடைசுடும் ஆயாவின்
அழகுப் பேத்தி

அரிச்சந்திரன் பொய் சொன்னது
இவளைக்கண்டபின்புதான்

இவள் நீர் ஊற்றிய
பூச்செடி பூவோடு சேர்த்து
புன்னகையும் பூத்தது

இவள் கல்லூரிக்கு
படிக்கச் செல்லும் காதல் புத்தகம்

எழுதியவர் : kumar (26-Oct-16, 6:06 pm)
பார்வை : 407

மேலே