இதயம் வலிக்குதடி அன்பே 555
உயிரே...
ஏனோ என்னை நானே
வெறுத்துக்கொண்டு இருந்தபோது...
நீ என் வாழ்வில் வந்தாய்
நம் கல்லூரி வாழ்வில்...
என் வாழ்க்கை இனிதான் அர்த்தமுள்ளதாக
இருக்குமென நினைத்தேன்...
என் விழிகளில் பட்டு விழிகளுக்கு
உயிர் கொடுத்தாய்...
மெல்ல துடிக்கும் இதயம்
உன்னை கண்டதும் படபடத்தது...
இதயம் கொடுத்து
இதயம் வாங்கினாய்...
கல்லூரி வாழ்வில்
வந்த நம் காதல்...
என் வாழ்நாளெல்லாம்
வருமென நினைத்தேனடி...
படைத்தவன் எழுதிய விதி
உனக்கும் எனக்கும்...
என் அன்பு வேண்டாமென்று
நீ சொல்ல...
அந்த நிமிடம் நான்
இறந்தேனடி...
அன்று என்னை மட்டுமே
வெறுத்தேன்...
இன்று உலகையே வெறுக்கிறேனடி
நீ இல்லாமல்.....