இன்னல்

காலையில் நேரமாய் எழுந்து
பசுவின் பாலினைக் கறந்து ,
வாசலில் கோலங்கள் வரைந்து,- பல
இன்னல்களுக்குப் பின் சமைத்த,
உணவைப் பரிமாறினால்!
உண்டவன் சொன்னான் எதோ
"உறைக்கவில்லையாம்".
எனக்கும் என் துன்பத்தை
உணராதவன் தூற்றல் உறைக்காமல்
கொல்லைப்புறம் சென்றேன்.- நான்
கலக்கிய புண்ணாக்கை பெருமையாய்
குடிக்கும் எருமையின் பசியாற்ற...

எழுதியவர் : (27-Oct-16, 10:18 pm)
Tanglish : iannal
பார்வை : 51

மேலே