மனசுக்குள் மத்தாப்பு

பார்வைகள் பரிமாற மனசுக்குள் மத்தாப்பு
சைகையாய் பேசப்பேச உள்ளத்தில் தித்திப்பு
சம்மதம் தராதவரை அனுதினமும் படபடப்பு
இதயத்தில் இடமளிக்க இப்போதோ குதூகளிப்பு

தீபாவளி வந்ததனால் பட்சணங்கள் அன்பளிப்பு
காலைமுதல் மாலைவரை தொலைக்காட்சி முணுமுணுப்பு
குழந்தைகள் சிரித்திருக்க வீடுகளில் கலகலப்பு
பள்ளிகள் தொழிற்சாலைகள் அத்தனையும் கதவடைப்பு

எப்படியோ ஏழைவீட்டில் பணம்திரட்டி சமாளிப்பு
பணமிருக்கும் வீட்டிலெல்லாம் உடைகளிலே மினுமினுப்பு
பார்த்துவெடி வைக்கச்சொல்லி அம்மாக்களின் கண்டிப்பு
காளையர்கள் கன்னியர்முன் காட்டிடுவர் வீராப்பு

எண்ணெய்தேய்த்து குளித்துமுடிக்க உடலெங்கும் கதகதப்பு
சாமிகும்பிடும் முன்னேயே பட்சணம்கடிக்க ஒருமுறைப்பு
பறந்துபோன வெடிவெடித்து பக்கத்துவீட்டில் ஜன்னலுடைப்பு
நரகாசுரன் கொல்லப்பட தோன்றியது தீபாவளியெனும்படைப்பு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-16, 8:11 am)
பார்வை : 314

மேலே