என் குட்டி தேவதை
என் குட்டி தேவதையே
வாய் பேசும் பட்டாம் பூச்சியே...
நிலையில்லா வாழ்வில்
நிலையான செல்வமே
நீ தான் என் செல்லமே....
என் வானே நீ வா
என் வாழ்வில் ஒளி வீச நீ வா...
வெண்ணிலா போன்ற
வெண் முகத்துக்கு
வெண் முத்து
பொட்டு வைக்கட்டுமா...
கண்ணிலாடும்
கருமை கடலுக்கு
கம்பன் வரி
கவி பாடட்டுமா....
இரு மெல்லிய பூக்கள்
தட்டி கொள்வது போல்
உன் கைகள் இரண்டும்
தட்டி கொள்ளுதே....
முன்னிருக்கும்
கோபத்துக்கு
வைரக்கல்லு
நான் தரவா....
உந்தன் கண்ணுதிரும்
பூக்களை போல்
தூய்மையான பூக்கள்
இவ்வுலகில் இல்லை ....
உந்தன் புன்னகை போல்
பொன்னகை எதுவும்
ஜொலிக்கவில்லை ....
என் தங்கம் வெளிப்படுத்தும்
பாவனைகள்
நவரசத்தில் இல்லை ....
என் செல்லம்
மொழிகின்ற வார்த்தைகள் போல்
இனிமையான கவி ஒன்றும்
எழுதவில்லை ...
அரக்கனும்
ஆசைபடுவான்
என் குட்டி தேவதை
அவளை கண்டால்
அன்பாய் வாழ .....
வெள்ளி நிலா
நடை பழக
என் சோகங்கள் அத்தனையும்
மறைய கண்டேன் ....
மழலை சொல்லில்
மதி மயங்கி
மங்காத இன்பம்
வாழ்வில் கொண்டேன்....
பட்டாடை கட்டி
அவள் நிற்கையிலே
என் கண்கள் அழகாகி
மெய் மறந்தேன் ....
தாய் மொழி பேசி
அவள் சிரிக்கும் போது
செந்தமிழின் இனிமை
அதை நான் கண்டேன் ....
அவளுடன் பொழுதை
நான் கழிக்கும் போது
என் பிராத்தனைகள்
நிறைவேறுவதை நான் கண்டேன் .....