தலைக்கு வந்தது ஹெல்மெட்டோட போச்சு -சிந்திக்க, சிரிக்க
கணவன் (மனைவியைப் பார்த்து) : அடியே தனம், என்ன உன் தம்பி
ஸ்கூட்டர் லெந்து கீழ விழுந்துட்டானாமே
மனைவி (தனம்) : அது ஏங்க கேக்கறீங்க, தெருல ஏதோ எண்ணை
சிந்தி இருக்கு பாவம் சறுக்கி கீழே
விழுந்துட்டானுங்க ,நல்ல வேளை ஹெல்மெட்
ஒழுங்கா போட்டுட்டு இருந்ததாலே தலையில
அடி படாம தப்பிச்சுட்டானுங்க ஆண்டவன்
க்ருபயால ................................
தலைக்கு வந்தது தலைப்பாகையோட
போச்சுன்னு
சொல்லுவாங்களே , அது மாதிரி ............
கணவன் : தனம் , தலைக்கு வந்தது ஹெல்மெட்டோட
போச்சுன்னு சொல்லு ..... பிள்ளாய் ஆண்டான்
ஹெல்மெட் போட்டு இருக்கான் ,அதுவும்
பெரிய ஸ்ட்ராப் போட்டு !.......
இப்போ புரியுதா ஹெல்மெட் என் போடணும் னு
தனம் : எங்க நீங்களும் இனிமே ஹெல்மெட் சரியாக
போட்டுக்க பழகுங்க ............. செரியா
கணவன் : அமான் கண்ணு இது ஒரு பாடமா ஆச்சு ...