முயற்சி

எனது வாழக்கையில் நான் வேலை செய்த தேசங்கள் பல. அவ்விடங்களில் துபாயும் ஒன்று. மற்றைய மத்திய கிழக்கு இடங்களைப்போல் அல்லாது துபாய் பல தேசமக்களை அரவணைத்து வாழும் தேசம். துபாயை மத்தியகிழக்கின் சிங்கப்பூரென்றும் சொல்லுவார்கள். பதின்ரெண்டு வருடங்கள் துபாயில் உயர்பதவியில் வேலை செய்த போது நான் சந்தித்த பிற இனத்தவர்கள் பலர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அனேகர் துபாயில் வேலை செய்தார்கள். மலையாளிகள் கடும் உழைப்பாளிகள். படித்தவர்கள் அம்மாநிலத்தில்; அனேகர். படித்து பட்டம் பெற்றவர்கள் கூட எந்த வேலை கொடுத்தாலும் மறுக்காமல் செய்வார்கள். வேலை தெரியாது என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற கொள்கையை கொண்டவர்கள். தமது இனத்தவர்களையும், நண்பர்களையும் துபாயுக்கு விசா ஒழுங்கு செய்து, அழைத்து எதாவது ஒரு வேலையில் அமர்த்திவிடுவார்கள்.

துபாயில் இரு முக்கிய சந்திகள் உண்டு ஒன்று தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் சந்நிக்கும் சந்தி. மற்றது கேரளாவில் இருந்து வந்தவர்கள் சந்திக்கும் சந்தி. துபாயில் வெள்ளிக்கிழமை விடு முறைதினம். அன்றையத் தினம் இருசந்திகளிலும் கூட்டத்துக்கு குறைவில்லை. தமிழும் மலையாளமும் தவழந்;து விiளாயாடும். அச்சந்திக்கு அருகே ஒரு கேரள ரெஸ்டொரன்ட் இருந்தது. விதம் விதமான ருசியான கேரள உணவு வகைகள். வாடிக்கையாளரகளுக்கு குறைவில்லை. எனக்கு சிக்கன் 65யும் பரோத்தாவும் என்றாலே போதும். எனக்கு உதவியாளராக இருந்த மாதவன் நாயர் என்பவர் மலையாளிகள் கூடும் சந்திக்கு அருகே உள்ள கொச்சி ரெஸ்டொரண்டை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். அன்று எனக்கு சிக்கன் 65யும் பரோத்தாவும் சாப்பிடவேண்டும் என்ற ஆசைவந்தது. மாதவன் நாயர் சொன்ன, டெய்;ரா துபாயில் உள்ள கொச்சி ரெஸ்டொரணட் என் நினைவுக்கு வந்தது.

******
கொச்சி ரெஸ்டரண்டுக்குள் போய்; ஓடர் கொடுக்கப் போன போது நான் ஏற்கனவே அறிமுகமான, எதிர்பார்க்காத, மலையாளி ஒருவர் கவுண்டரில் அமர்ந்திருந்தார். மேசையின் ஓரத்தில் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் என்ற வணிக பரிபாலனம் பற்றிய ஆங்கில நூல் இருந்தது.

“வெல்கம் சேர் டு கொச்சி ரெஸ்டொரண்ட்” என்று என்னை கண்டவுடன் ரெஸ்டொரணட் உரிமையாளர் வரவேற்றார். எனக்கு உரிமையாளரைக் கண்டவுடன் பழைய நினைவுகள் மீண்டன.

“ நீர் வர்கீஸ் தானே. இது உமது ரெஸ்டொரண்டா”? நான் கவுண்டரில் இருந்தவரைக் கேட்டேன்

“ ஓம் சார். அதே. என்னை ஞாபகம் உண்டோ ”?

“ ஏன் இல்லை. இரு வருஷங்களுக்கு முதல் எனது காரை தினமும் ஒபீசுக்கு வந்து கழுவி துடைத்த வர்கீஸ்தானே நீர்”?

“அதே ஆள்தான் சேர்”, வர்கீஸ் சிரித்தபடி சொன்னார்.

“ அது சரி இது என்ன ஆங்கிலப் புததகம் மேசையில்;”?

“ பிஸ்னஸ் மனேஜ்மண்ட் பற்றிய புத்தகம் சார்”.

“ உமக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியுமா”?

வர்கீஸ் புன்னகையோடு “ நான் ஒரு பிகொம் பட்டதாரி சேர். கேரளாவிலை நல்ல வேலை கிடைக்காமல் என் வீட்டை அடைவு வைத்து துபாயுக்கு வந்தனான்”.

“ வந்தவுடன் வேலை கிடைத்ததா”?

“ஓம் சேர். துபாயுக்கு நாலு வருஷங்களுக்கு முன் நான் புதிதாக வந்த போது கட்டிடம் ஒன்றில் கூலி வேலை செய்தனான். அதன் பிறகு டெய்ரா துபாயில் உள்ள ஒரு ரெஸ்டரண்டில் பாத்திரங்கள் கழுவினேன். சேவர் வேலை கூட செய்தனான். அதற்குப் பிறகு கார்கள் கழுவி சம்பாதித்தேன். பல தொழில்கள் செய்து அதில் மிச்சம் பிடித்த காசிலை ஒரு பழ ஜுஸ் கடை ஆரம்பித்தேன். அதிலை கிடைத்த பணத்திலை ஒரு அரேபியரின் உதவியோடு இந்த ரெஸ்டரண்டை ஆரம்பித்தேன்”. எப்படி இந்த நிலைக்கு தான் வந்ததை வர்கீஸ் விபரித்தார்.

“நீர் சொல்வதைக் கேட்க எனக்கு உம்மேல் பெருமையாக இருக்கு வர்கீஸ். அதுவும் ஒரு பட்டதாரி கூலி வேலை செய்து, கார் கழுவி, ரெஸ்டரண்டில் வேலை செய்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்ததை கேட்கும் போது நீர் ஒரு சாதனையாளன் என்று தான் சொல்லுவன். அது சரி உமக்கு கார் கழுவ உதவிய உம்முடைய தம்பி மத்தாய் இப்போ எங்கே”?

“ அவர்தான் ரெஸ்டரண்டில் சமையலுக்கு பொறுப்பாக இருக்கிறார். அதோ சேவர்களாக வேலை செய்கிறார்களே இருவர், அவர்கள் என் மச்சினர்கள். சமையலுக்கு என் தம்பிக்கு உதவியாக என் அக்காவின்ன மகன்; ஒருவர் இருக்கிறார்”

“என்ன வர்கீஸ் உம்முடைய உறவினர்கள் பலர் துபாயுக்கு வந்துவிட்டார்கள் போலத் தெரிகிறது” நான் சிரித்தபடி சொன்னேன்.

“ கஷ்டப்பட்டால் தானே வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் சேர்”

“ நீர் நல்ல பிரையாசைக்காரன். உமது கடுமையான உழைப்பும் முயற்சியும் தொடரட்டும். உமது அடுத்த திட்டம் என்ன? ” நான் கேட்டேன்.

“பார் துபாயில் ஒரு கேரள ரெஸ்டொரண்டை; ஆரம்பிக்க திட்டம் இருக்கு. என் தம்பி மத்தாய் அதுற்குப் பொறுப்பாக இருப்பார். அவரின் மாமன், விசா கிடைத்து துபாய் வர இருக்கிறார். அவர் வந்ததும் ரெஸ்டொரண்ட் ஆரம்பிக்க இருக்கிறன்” என்றார் உறுதியோடு.

“ அது சரி ரெஸ்டொரண்ட்டுக்கு என்ன பெயர் வைக்க இருக்கீறர்”?

“பாலக்காடு ரெஸ்டொரண்ட் சார்”.

அந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு பிரபல மிருதங்க வித்துவான் பாலக்காடு மணி அய்யரினதும், பாலக்காட்டு லுங்கியின் ஞாபகங்கள் தான் நினைவுக்கு வந்தது.

நான் ஓடர் செய்த சிக்கின் 65யும் புரோத்தா பார்சலை சேவர் கொண்டு வந்து தந்தான்.

“ எவ்வவு காசு நான் தரவேண்டும் வர்கீஸ்? நான் கேட்டேன்.

“ காசு வேண்டாம் சேர். நீங்கள் இரண்டு வருஷத்துக்கு முன்பு செய்த உதவியை நான் மறக்க முடியுமா? ஒரு வருஷமாக உங்கடை கார் கழுவி நான் எப்படி முன்னுக்கு வந்தேன் என்பது என் நினைவில் இருக்கிறது.“ வர்கீஸ் பணம் வாங்க மறுத்துவிட்டார..

நான் வர்கீசுக்கு பதில் சொல்லாமல் ஒரு ஐம்பது திராம்நோட்டை மேசையில் வைத்துவிட்டு கொச்சி ரெஸ்டாரண்டை விட்டு பரோத்தா பார்சலோடு வெளியேறினேன்.

********

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (31-Oct-16, 5:02 am)
Tanglish : muyarchi
பார்வை : 560

மேலே