கோபத்தோடு செல்பவன் நஷ்டத்தையே சம்பாதிக்கிறான்

ஒரு ஊரில், ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு, தான் என்ற அகங்காரம் அதிகம் உண்டு. மற்றவர்களை மிகவும் துச்சமாக மதிப்பான். அவன் ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைக் கண்டால் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் மேல் அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பு.

ஒரு நாள் அவன் ஒரு அவசர வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்குச் செல்ல நேரிட்டது. அந்த வேலை முடிந்து, சாப்பிடுவதற்காக, பக்கத்தில் உள்ள ஒரு பெரிய உணவகத்திற்குச் சென்றான். உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது. ஓரிரு இருக்கைகள் தவிர்த்து, அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்தவன் பார்வையில், ஒரு ஓரத்தில், அவனுக்கு பிடிக்கவே பிடிக்காத பகுதி மக்களில், ஒருவன் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டவுடன், அவனையே அறியாமல் அவனுக்கு ஆத்திரமமும் வெறுப்பும் ஒரு சேர வந்தது. உடனே, அவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவனை அழைத்து, சத்தமாக, இந்த உணவகத்தில், அவனுக்குப் பிடிக்காத "அந்த ஒரு மனிதனைத் தவிர்த்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான தொகையை நானே கொடுக்கிறேன்" என்று மிகவும் சத்தமாக கூறினான்.

ஆனால் பிடிக்காதவனோ..சிரித்த முகத்துடன் வந்து செல்வந்தனுக்கு நன்றி கூறினான்,இதைக் கண்ட செல்வந்தனுக்கு மீண்டும் கோபம் கொப்பளித்தது....

மீண்டும் சர்வரை அழைத்து அந்த ஒருவனைத்தவிர்த்து சாப்பிடும் அனைவருக்கும் ஒருமாதம் முழுவதும் பில்லை தானே கட்டிவிடுவதாக உரக்க கூவினான்...

மீண்டும் பிடிக்காதவன் எழுந்து வந்து மனமார்ந்த நன்றிகள் என்று கூறி சென்றான்...கோபத்தின் உச்சத்தில் இருந்த செல்வந்தன் அவனிடம் நீ சம்பந்தமில்லாமல் நன்றி சொல்கிறாய்....நான் பணம் கட்டுவது உன்னை தவிர்த்து மற்ற அனைவருக்கும் மட்டுமே.... என்றான்

அதற்கு பிடிக்காதவன் சொன்னான்... நீங்கள் பணம் கட்டுவது அவர்களுக்கு தான், ஆனால் உணவகம் என்னுடையது... பணம் கட்டப்போவது எனக்குத்தான்... ஒரு நல்ல மனிதனுக்கு நன்றி சொல்வது இயல்புதானே......

#நீதி...கோபத்தோடு செல்பவன் நஷ்டத்தையே சம்பாதிக்கிறான்
நண்பர்களே அன்பால் இணைவோம்
தவறுகளையும்... தவறானவர்களையும்
திருத்த முயற்ச்சிக்கலாமே......

எழுதியவர் : செல்வமணி (31-Oct-16, 8:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 472

மேலே