லவ் பண்ணல

"என்னடா காலேஜ்லாம் படிச்ச.ஒரு பொண்ணைக் கூடவா லவ் பண்ணல.".

"நான் பண்ணேன்.அவுகளும் பண்ணனும்ல..".

"ஐடி கம்பெனிலலாம் வேலை பார்த்த.அங்க கூடவா லவ் பண்ணல.".

"அங்கலாம் நான் யார்ட்டயும் பேசுனதே இல்லை.".

"இந்த பக்கத்து வீடு,பஸ்ஸ்டாண்ட்,ப்ரண்ட் மூலமா..".

"இல்லவே இல்லை".

"பேஸ்புக்ல பொழுதோட கெடக்க.அங்கக் கூட லவ் பண்ண முடியலயா?".

"ஸ்ஸ்ஸ்.அதெல்லாம் இல்லை.நானா வேணாங்கறேன்?வந்தாதானே..".

"29 வயசுல முடிக்கலன்னா 38 வயசுக்கு மேலதான் கல்யாணம் ஆகும்ன்னு ஜாதகத்துல இருக்கு.6 மாசத்துல எங்கப் போயி பொண்ணு தேடறது?லவ் கூடவா பண்ணத் தெரியல".

"என்னது இப்ப விட்டா 38 வயசுலதானா.ஐ...ஜாலி".

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (31-Oct-16, 10:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 474

மேலே