நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு

நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு....

முகவரியின்றி முகத்தின் அறிமுகமின்றி
முகநூலில் அறிமுகமானவள்...
முகத்தில் புன்முறுவல் பூத்து
அகத்தில் ஆயிரம் வலிகளை சுமந்து
முகமூடி அணிந்து முகமறியா
நெஞ்சங்களின் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்பவள்...

தன் மனதின் ரணங்களை மறைத்து
அடுத்தவர் ரணங்களை ஆற்றுபவள்..
தன் விழிகள் உதிரம் வடித்தாலும்
மற்றையவர் விழிநீரை கரம்
கொண்டே துடைத்திடுபவள்...
தன் கண்ணீரை மட்டும் தனக்குள்ளேயே
புதைப்பவள்...

தன் வலிகளை முகத்திரை கொண்டு
மறைத்திட்டவள்...
மரணத்தின் வலியிலே என் முன்னே
துடித்திட்டாள்...
உதிரம் வழிந்த உதட்டின் சிரிப்போடே
என் மடியினில் ஆழ்ந்து உறங்கிட்டாள்...

இருள் சூழ்ந்த பலர் வாழ்க்கையில்
ஒளியேற்றிய நிலவு அவளும் ..
மனதில் வடுக்களோடு மரித்துப்போனாள்..
உதட்டளவில் சிரிப்பவர்கள் எல்லாம்
இன்பத்தில் திளைப்பவர்கள் அல்ல
என உணர்த்தியே மரணத்தை
நெருக்கமாய் அணைத்துக்கொண்டாள்...

எழுதியவர் : அன்புடன் சகி (2-Nov-16, 3:09 pm)
பார்வை : 489

மேலே