என்னை விட்டுத் தள்ளிப் போகாதே - முதல் பகுதி

மேகமாக கூடுகிறேன் ஆகாயத்திலே
மழைத் துளிகளாக பொழிகின்றேன்
உன் சிரிப்பின் ஒலியினைக் கேட்க
பல்லாங்குழியில் விழும் சோவிகளின் சத்தத்தைப் போல
கருநாகமாக படமெடுப்பேன்
தீயவன் உன்னைத் தீண்டாமல் இருக்க
வேகமாக மாறுகிறேன் குடையாக
நிழலாக தொடர்கிறேன் உன்னுடனே
வெயிலின் வெப்பம் உன்னை சீண்டாமலிருக்க
சோகமாக இருந்ததில்லை
எனது அருகாமையில் நீ இருக்கும் வரை
புதைந்து கிடந்தாலும் பூமியைப் பிளப்பேன்
எந்தன் உயிராக நீ இருந்தால்
என் வாழ்வின்
ஆதியில் தொடங்கினேன்
தேதியைக் கிழித்துக்கொண்டு
அந்தம் வரை
எனது பாதியாக எப்பொழுது
நீ வருவாய் என்று
என்றும்
என்னை விட்டுத் தள்ளிப் போகாதே

எழுதியவர் : சரத் குமார் (2-Nov-16, 10:01 pm)
பார்வை : 248

மேலே