அடையாளம் இன்றி போன ஆசைகள்

இயற்கையை படைத்து
இயற்கையோடு ஒன்றிவாழ
உயிரையும் படைத்து
படைக்கும் போது சில
பிழைகளை விடுத்து
படைத்திட்ட படைப்பே
இன்று பேராசை கொண்டு
படைப்பின் ரகசியம் மறந்து
நான் எனது என்று
சுயநல சேற்றில் உழன்று
பேராசையோடு
கட்டிய கோட்டைகள்யாவும்
பறவையின் எச்சங்களாய்
மிச்சமிருக்கின்றன
ஆசைப்பட்டதோ அடையாளம்
தெரியாமல்.
#sof_sekar