தினமணி கவிதைமணி தந்த தலைப்பு பட்டதாரி கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது !
தெருவுக்கு ஒரு பொறியாளர் இருந்தார் அன்று
ஒரு வீட்டில் பல பொறியாளர் உள்ளனர் இன்று !
வேலையில்லா பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு உள்ளனர்
விவசாயம் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும் !
பட்டதாரி படித்த படிப்பிற்கு வேலை இல்லை
பட்டதாரி தேடும் வேலை கிடைப்பதில்லை !
கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை
கிடைக்காத வேலையின் மீது ஏக்கம் உண்டு !
கல்வி பெருகியது என்பது முற்றிலும் உண்மை
பண்பு பெருகவில்லை என்பது கசப்பான உண்மை !
திருட்டு வழக்கில் பொறியாளர் கைது செய்தி படித்து
திடுக்கிட்டோம் இதற்காகவா பயின்றான் என்று !
படித்தவன் மோசம் செய்தால் ஐயோ என்று போவான்
பாரதி பாடி வைத்தான் நல்ல பாடல் அன்று !
படிப்பறிவு இருக்கும் பலருக்கும் இன்று
பொது அறிவு பற்றாக்குறை இருக்கு !
நீதிபோதனை வகுப்புகள் பள்ளிகளில்
நிறுத்தப்பட்ட காரணத்தால் மாணவர்கள் !
நீதி ,நேர்மை ,ஒழுக்கம் ,மனிதநேயம்
நல்ல அறம் எதுவும் அறியவில்லை இன்று !
மது அருந்தி போதையோடு பள்ளி சென்ற மாணவன்
மேலான ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் !
வரும் செய்திகள் யாவும் வேதனை தருகின்றன
வருங்காலங்களில் இக்கொடுமைகளை வேண்டாம் !
கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இனி
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் !
பட்டதாரிகள் பெருகிப் பயனில்லை இன்று
பண்பாளர்கள் பெருகிட வழி வகை செய்யுங்கள் !