விதியும் ஏனோ தடுக்குது

பட்டாம்பூச்சி பறவைகளும்
சுதந்திரமா திரியுது.........
பாவப்பட்ட தமிழினமோ
அகதிகளாய் அலையுது
சிங்களவன் எறிந்த குண்டு
எறிகணையாய் எரியுது
எங்க நாடு தமிழீழம்
சுடுகாடாய் தெரியுது ( பட்டாம்)

அடிமையாய் வாழ்ந்திடத்தான்
அசிங்கமாய் இருக்குது
அதனால எங்க மேல
அடக்குமுறை நடக்குது
புழு பூச்சி கூட வாழ
பூமியில் இடம் இருக்குது
பூமியில நாங்க வாழ
விதியும் ஏனோ தடுக்குது ( பட்டாம்)

முள்வேலி கம்பிக்குள்ள
மூச்சடைச்சி கெடக்குறோம்
ஒரு வேளை சோத்துக்குத்தான்
கதறியழுது துடிக்கிறோம்
காக்கா குருவியெல்லாம்
அததுகூட்டுல வாழுது
பாவப்பட்ட தமிழினமோ
நாட்டைவிட்டு ஓடுது ( பட்டாம்)

எழுதியவர் : இரா .மாயா (3-Nov-16, 8:10 pm)
பார்வை : 62

மேலே