தமிழை அறிந்திடுவோம்,அறியவைப்போம்,போற்றி காத்திடுவோம்
இன்றைய கால பள்ளிகளில்
நம் செந்தமிழ் நாட்டு பள்ளிகளில்
தொன் தமிழ் கூறிடும் நாட்டினிலே
ஒளவைத் தமிழ் சொல்லித் தருவார்
யாரும் இளைப்பு போலும்
ஆங்கிலம் தான் வேண்டுமென்று
பள்ளிப் பாடங்கள் அமைய
சிறுவர்கள் அறிவதெல்லாம்
ஆங்கில" ரைம்ஸ் " களே
ஒளவை அன்று பாடி தந்த
ஆதிச்ச சூடியை இங்கு யார் அறிவார்
ஆசிரியர் அறிவாரோ யாரறிவார் ?
ஒளவை அன்று பாடித் தந்த
"நாலு கோடியை" யார் அறிவார்
அந்த நாலு கோடியில் வாழ்க்கை
ரகசியம் ஓம்காரமாய் தெரிந்திருக்க
ஆங்கிலப் ரைம்ஸ் கள் தேவை தானா?
ஆங்கிலம் வெள்ளையன் நமக்களித்த ,
அடிமை மொழி தான் இருப்பினும்
மொழிகள் மேல் எமக்கு வெறுப்பு ஏதும் இல்லை ;
விஞான அறிவைப் பெருக்கிக் கொள்ள
தேவைதான் இந்த மொழி அறிவோம்
விஞான அறிவெல்லாம் மெய்ஞானம் பெறவே
மெய்ஞானம் அறிய நம் தொன் மொழி
தென் மொழி தாய்த் தமிழ் மொழி
சிறந்த மொழி என்றும் அறியனும்
தாய்த் தமிழ்மொழி கற்க செய்வோம்
நம் சிறுவருக்கு இதன் அருமையை
சொல்லி வளர்ப்போம்
தமிழை பேசிட பழக்கிடுவோம்
அதை எழுதி, படிக்க , நம்
தமிழ் பண்பை, கலாச்சாரமதை, இலக்கியத்தை
படித்து வளர்ந்திட, தாய்த்தமிழை
அன்னையாய் நினைத்து போற்றிட
ஆவன செய்வோம்
வாழ்க நம் தமிழ்,வளர்க தமிழர்
+

