தனலட்சுமி

கலியுலக நிசா அழகியே
கம்பன் பாட்டில் வந்த பதுமையே
காலம் போற்றும் அழகு திரவியே
காளையர் கண் கிறங்கும் மடந்தையே

பூரண அழகில் வளர்ந்தவளே
புவிஈர்ப்பு வகையில் நடந்தவளே
தேன் ஊற்றை இதழில் சுமந்தவளே
தென் தமிழில் பாட வைத்தவளே

சொல்லில் அடங்காது உன்னழகு
சொல்லியும் அடங்காது உன்நினைவு
சேர துடிக்கிறது என்னிரவு
சேர வந்திடுமோ மனநிறைவு

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதடி
என்னடி சொல்லுவது என்கண்ணடி கொண்டாயடி
சிந்தையும் உன்னால் கந்தையானது
சிந்திய வார்த்தை விந்தையானது

கூறடி நீயும் ஒரு வார்த்தை
சேரடி அதில் மரு வார்த்தை
தருவாயா காதல் நிறு வார்த்தை
தருவேன் திருமதி திரு வார்த்தை

எழுதியவர் : கதிர் (5-Nov-16, 9:37 pm)
பார்வை : 112

மேலே