காதல் மரபுக்கவி

அவளின் செந்தேகம்
பெண்ணால் ஆனதா
இல்லை
பொன்னால் ஆனதா
எனக்கோ சந்தேகம்

அவள் மரத்தின்
அருகே நடந்தால்
அதுதான் மரபுக்கவிதை

அவள் புது உடை
அணிந்தால்
அதுதான் புதுக்கவிதை

கடவுள்கூட
கண்திறக்கின்றது
அவள் கருவறையில் நிற்கும்போது

இவள் கிளின்டன் வீட்டில்
வளர்ந்த கிளி அல்ல
கிளியோபாட்ரா வீட்டில்
வளர்ந்த கிளி

இவளை சுற்றினால்தான்
தற்கால ஞானப்பழம் கிட்டும்

எழுதியவர் : குமார் (6-Nov-16, 6:14 pm)
பார்வை : 457

மேலே