உலக நாயகன் கமல்

கமலஹாசன்... இவன்
பிறவிக் கலைஞன்
மனித நேயன்...
கலைகளின் இமயன்...

தொழிலோடு தமிழையும்
ரசிகர்களோடு
மக்களையும் நேசிப்பவன்...
அவர்கள் இதயங்களை
வாசிக்கத் தெரிந்தவன்...

சுப்ரபாதம்
காயத்ரிமந்திரம்
ஸ்லோகங்கள்...
இன்னும் இன்றும்
ஆன்மிகம் தெரிந்த
நாத்திகன்...

தன் திறமைகளை
ரசிகர்களின்
மகிழ்வுக்கு
அர்ப்பணித்தவன்...

பொருளை விட
புகழை அதிகம்
சம்பாதித்தவன்...

முண்டாசுக் கவிஞன்
பாரதி சிந்தனைகளின்
சாரதியாய்த் திகழ்பவன்..

இன்னொருவன்
இவனொருவன் போல்
ஆக ஏலுமா என்பதில்
இணையற்றவன்...

சரீரத்தின் நர்த்தனத்திலும்
சாரீரத்தின் பாடலிலும்
இனிமையை இயல்பாய்க்
கொண்டவன்...

நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்...தன்
பரதம் கொண்டு இவன்
பாரதம் மகிழச் செய்தவன்...

சினிமாவில் எத்தனையோ
தசாவதாரங்களின்
அவதாரி இவன்...
வாழ்வில் நல்ல
பரோபகாரி இவன்...

சினிமாவில் மட்டும்
நடிக்கத்
தெரிந்தவன்...

தமிழ்த்திரை உலகிற்கு
பெருமை சேர்த்தவன்
இன்னும் சேர்ப்பவன்
உலகநாயகன்...

இவன் ஆள்
அழகானவன்
உள்ளம் மிக மிக
அழகானவன்...

இவன் உழைக்கத்
துவங்கியபோது
வயது ஐந்து...
ஐம்பத்தெட்டிற்குப் பிறகும்
ஓய்வெடுக்காதவன்...

எம்.ஜி.ஆர், சிவாஜி நாகேஷ்
பாலச்சந்தர் போன்ற
ஜாம்பவான்களின்
கரம்பிடித்து வளர்ந்தவன்...

இங்கிலாந்து ராணியை
இந்தியாவிற்கு
அழைத்து வந்து
விழா நடத்தி மகிழ்ந்தவன்..

மூன்று தேசிய விருதுகளுக்கும்
பத்தொன்பது
ஃபிலிம்பேர் விருதுகளுக்கும்
சொந்தக்காரன்...

செவாலியே விருதுக்கு
பெருமை சேர்த்த
இந்தியர்களில்
இவனும் ஒருவன்...

தனக்கேற்பட்ட
விபத்துக்களையும்
வேடிக்கையாய்
எடுத்துக் கொள்பவன்...

ரசிகர் மன்றங்களை
நற்பணிமன்றங்களாய்
மாற்றம் செய்து பணிகளில்
மாறாத ஆர்வம்
கொண்டவன்...

மொழிகள் பல
தெரிந்தவன்..அரசியல் சேர
வழிகள் இருந்தும்
விரும்பாதவன்...

வார்த்தைகள் விவரிக்காத
விஷயங்களையும்
உன்னதமாகச் சொல்லும்
உடல்மொழி தெரிந்தவன்...
தன் துயரம் வெளி சொல்லும்
வாய்மொழி தெரியாதவன்...

இந்த அழகன்
அரியவன் நம்முள்
ஒருவன் என்பதில்
தமிழகமும்
இந்திய தேசமும்
பெருமை கொள்கிறது...

அன்பன் கமலுக்கு இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்!
வாழ்க பல்லாண்டு!!
👍😀🎂🌹🌺🌷

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (7-Nov-16, 10:43 am)
பார்வை : 572

மேலே