புது மழைப் பொன்னிலம்

புதுமழைப் பொழிவினில் பொன்னிலம் குளிர்ந்தது
புல்லுடன் நெல்லும் மகிழ்ந்தது பூமியில்
அறுவடைக்கால கனவுகள் நனவாகும் வேளாண்மையில்
உழுபவன் உள்ளமும் ஊரும் வாழுமே !
----நிலை மண்டில ஆசிரியப்பா
புதுமழை நற்பொழிவில் பொன்னிலம் பூத்திடும்
புல்லுடன் நெல்லும் மகிழும் நிலத்தில்
அறுவடைக் கால கனவு நனவாகும்
நல்லுழவு டன்ஊர்வா ழும்
---பல விகற்ப இன்னிசை வெண்பா
----கவின் சாரலன்