விடியல் தரும் வியர்வை

ஐயா
எழந்துருயா...
விடிஞ்சு போச்சு
உன் வயசுல
எங்க ஊர் மக்க.
மொகத்துலதா சூரியன்
முழிக்கும்...
சேவல கூவ எழுப்பிவிடுவோம்

என் தாத்தன் நாலு
தலைமுறை பார்த்தான்....!
உன் தாத்தன் நான்
மூன்று தலைமுறை பார்த்தேன்...!
உன் தகப்பன் ரெண்டு
தலைமுறை பார்க்கிறான்
உன் தலைமுறை என்ன செய்ய
போகுதோ.,..?

காத்தால எழந்து
நெலத்துல அண்ட கழிக்குறது
சேத்துல நடந்து கல எடுக்குறது
அதுல வர வேர்வை இருக்கே

மார்கழி மாசத்து
புல்வெளி போல உடல்
காட்சி தரும்

விடியல் வியர்வை நல்ல மருத்துவம்
அது ஆயுசு வளர்க்கும்
காலை எழுந்து படுக்கை தொறந்து வேலை செய்

அதில் வரும் வேர்வையும் ஒரு
போதி மரம் தான்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (7-Nov-16, 3:17 pm)
பார்வை : 264

மேலே