பல விகற்ப இன்னிசை வெண்பா மாமுனிவர் கொங்கணவர் ஓர்நதியில் நீராடி
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
மாமுனிவர் கொங்கணவர் ஓர்நதியில் நீராடி
போதி மரத்தருகில் வந்தடைந்த வேளையிலே
மேலிருந்து கொக்கொன்று இட்டிடவே வெண்நெச்சம்
வீழ்ந்ததவர் மேனியி லே
மாசுபட மேனியிலே நீராட வேண்டுமென்ற
ஆத்திரத்தில் எச்சமிட்ட அக்கொக்கை கண்ணிரண்டும்
பார்த்ததுமே தீப்பிழம்பால் கொங்கணவர் சுட்டெரிக்க
வீழ்ந்ததவர் காலடி யில்
வாசுகி அம்மையரின் வாயிற் படியருகில்
மாமுனிவர் கொங்கணவர் கையேந்தி நிற்கையிலே
தாமதம் ஆகியதால் அன்னம் தருவதற்கு
சுட்டெரிக்கப் பார்த்தது மே
பத்தினி பொற்கரத்தில் நீரன்னம் வைத்திருக்க
பார்த்திடவும் மாமுனியின் கண்ணிரண்டில் தீப்பிழம்பு
கொக்கெனநி னைத்தாயோ கொங்கணவா என்றவுடன்
குத்தியதே நெஞ்சத்தில் முள்
சினம்தணிந்து கொங்கணவர் சிந்திக்க உள்ளத்தில்
தோன்றியதே உண்மை கொழுநன் தொழுதெழுமின்
பல்லாண்டு செய்தவப்ப லன்பெறுவார் பத்தினிப்
பெண்ணொருத்தி இல்வாழ்வி னில்
08-11-2016