பல விகற்ப இன்னிசை வெண்பா அறியா சனங்கள் அகிலத் திருக்க

இன்று பிறந்தாள் காணும் ஸ்ரீ லால் கிருஷ்ணா அத்வானி அவர்கள் பிரதமர் ஆகவில்லையே என்று வருந்தியவர்களில் நானும் ஒருவன். இது மக்கள் தீர்ப்போ மகேசன் தீர்ப்போ யாரிவாரோ. .

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

அறியா சனங்கள் அகிலத் திருக்க
அரியா சனமிவர டைந்திட வில்லை
அரியோ அரனோ அறியேன் இருவரில்
யாரிவர்ப கைவரென் று

08-11-2016

எழுதியவர் : (8-Nov-16, 11:57 am)
பார்வை : 57

மேலே