பட்டதாரி

ஆயிரம் கனவுகளை -
அடிமனதில் புதைத்துவைத்து ;
பட்டம் பெரும் நாளை எண்ணி -
பட்டாம் பூச்ச்சாய் பறந்ததென்ன ?
சாதித்து விட்ட சந்தோசம் !
சலசலப்புக்கு பஞ்சமில்லை !
பட்டம் வாங்கும் முன்னே நான் -
பகல் கனவில் மூழ்கினேன் !
படிப்புக் கேற்ற வேலை தேடி -
பகலெல்லாம் அலைந்ததில் ;
பஞ்சம் மட்டும் கூடவர -
பரிகசிக்கும் பட்டமே !
பட்டதாரி என்று சொல்லி -
பரிகசிக்கும் உலகிலே ;
பாவப்பட்ட மனிதனாய் -
பல்லிளித்து அலைகிறேன் !