குட் டச் -பேட் டச்

பவித்ரா படு சுட்டிப் பெண் படிப்பிலும் சரி , விளையாட்டிலும் சரி
அசோக் -ரமணியின் ஒரே செல்லப்பிள்ளை ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள் ,
அசோக் - ரமணி இருவரும் சாப்ட்வேர் பீல்டு கை நிறைய சம்பளம் , நல்ல வசதி என்ன பவித்ராவ பாத்துக்க தான் யாரும் இல்லை , அசோக் தான் தன் அம்மாவ கிராமத்தை விட்டு இங்க வர வச்சான் , தாயம்மா தாயம்மானு பவித்ரா பாட்டி மேல கொள்ள பாசம் வச்சிருப்பா பாட்டியும் தான் ரெண்டு பேரும் பிரியவே மாட்டாங்க, பாட்டி மடில படுத்துட்டு கதை கேக்கறது, பாட்டி அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி அதனால பொது அறிவுல ஆரம்பிச்சி வடை கதை வரை ஓன்னு விடாம எல்லாத்தையும் கத்துகிட்டா பவித்ரா
பவி எதிர்த்த வீட்டு அங்கிள் கிட்ட போய் புது பட சீடி அம்மா வாங்கீட்டு வர சொன்னேன் சொல்லு....
திரும்பி வரும் போது பவித்ரா ஒரு மாதிரி இருந்தாள் ஆனா ரமணி அதை கண்டுக்கவில்லை , தாயம்மா பவியிடம் கேட்டதற்கு இல்ல பாட்டி ஒன்னுமில்லைனு சொல்லி மலுப்பீட்டா,,,
அன்று ஞாயிறு ரமணி பவியை அழைத்து எதிர்த்த வீட்ல போய் டீவில கேபிள் கரண்ட் இருக்கானு கேட்டுடு வாடி பவீ என்றால் ,
போம்மா நான் அவங்க வீட்டுக்கு போக மாட்டேன்
ஏனாம் இப்போ போகல அடி பயங்கரமா விழும்
ப்ளீஸ் மா நீயே போயிட்டு வா
பவி இப்போ உன்ன போக சொன்னேன் நான் ,,
அவள் அங்கே போய் ஒரு அரை மணி நேரத்தில் எதிர்த்த வீட்டிலிருந்து பவித்ராவின் சத்தம் பயங்கரமாக கேட்க அங்கே அனைவரும் ஒடினர், அங்கே எதிர்த்த வீட்டு ராஜேஸ் முகம் வெளிரி போய் நின்றிருந்தார்
என்ன பவி என்னாச்சு ???
இந்த அங்கிள் என்ன தப்பா தொடுறார் மா ....
இல்லை இல்லை இந்த புள்ள பொய் பேசுது ,
யாரு அங்கிள் பொய் பேசுறா நீங்களா நானா நீங்க என்ன தொடும்போது அது சரியான தொடுதலா இல்ல தவறான தொடுதலான்னு எனக்கு தெரியாதா சின்ன பிள்ளைனா நீங்க என்ன பன்னாலும் பாத்துட்டு பேசாம இருந்துப்போமா குட் டச்- பேட் டச் தெரியும் நீங்க தொடுறது தவறா இருந்தா உடனே சத்தம் போடனும் எங்க பாட்டி சொல்லி கொடுத்திருக்காங்க அன்னைக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் நீங்க திருந்தல இப்போ திரும்பவும் இப்டி பன்றீங்க இன்னும் இது போல பன்னுவீங்கஙுங்களுக்கு தண்டனை கிடைக்கனும் அங்கிள்
தன் பொண்ணா இப்படி பேசுவது வாயடைத்து போய் நின்றால் ரமணி!!
அனைவரும் ராஜேஸை அடித்து துவைத்து விட்டனர்
"உங்கள் வீடுகளில் 10வயது நிரம்பிய பெண் பிள்ளை இருந்தால் கட்டாயம் குட் டச் -பேட் டச் சொல்லி கொடுத்து வளர்த்துங்கள் தவறில்லை

எழுதியவர் : க.நாகராணி (8-Nov-16, 10:55 pm)
பார்வை : 311

மேலே