வைரஸ் Virus

அறிவியற் கதை


மார்க்கண்டனும் (மாரக்), ஜெயதேவியும (தேவி); ஆகிய இருவரும் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில் பட்டம் பெற்றவர்கள். படிக்கும் போது இருவருக்குமிடையே பலத்த போட்டி. அதுவே அவர்களுக்கிடையே, காதலுக்கு வித்திட்டு, திருமணத்தில் முடிந்தது. வைத்திய துறை நிறுவனம் ஒன்றில் இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில் மார்க் புரோகிறாமராக வேலை செய்யத்தொடங்கினான். தேவி, பல்கலைகழகம் ஒன்றில் லெக்சரராக வேலை செய்தாள். திருமணமாகி இரு வருடத்தில் தம்பதிகளுக்கு இந்திரன் என்ற இந்திரஜித் பிறந்தான்

இந்திரன் பத்துவயதாக இருக்கும்போதே புரோகிறாம் எழுதுவதில் ஆர்வம் காட்டினான். அதற்கு முக்கிய காரணம் அவனது பெற்றோர்கள். பெற்றறொர்கள் புரோகிறாம் எழுதுவதைக் கண்வெட்டாமல் இந்திரன் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடைய நச்சரிப்பு தாங்காமல் அவனக்கு புரோகிறாம் எழுதும் மொழிகளை சொல்லிக கொடுத்தார்கள். பல கேள்விகளை கேட்டு தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வான். விரைவில் மொழிகளை அவன் கற்றதை அவர்களால் நம்பமுடியவில்லை. தங்களைப்போல கணனித் துறையில் இந்திரன் படித்து பிரபல்யமாக வேண்டும் என்பது அவனது பெற்றறொரின் ஆசை. அவர்களின் விருப்பத்தினபடி இந்திரன் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில் படித்து, முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றான்..

தன்னோடு ஒன்றாகப் படித்த நணபர்களான நந்தனும், தேவனும் அதிக சம்பளத்தில் பல சலுகைகளோடு அமெரிக்காவில் உள்ள பிரபல்யமான கணனி நிறுவனம் ஒன்றில் வெலை கிடைத்து இருவருடங்களுக்கு முன் சென்றது இந்திரனின் வாழக்;கையில் தனிமையைக் கொடுத்தது. தானும்; அமெரிக்கா போய் வேலை செய்து பிரபல்யமாக வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் படிப்படியாக வளரத்தொடங்கியது. தங்களின் ஒரே மகன் தங்களை பிரிந்து, பிறந்த நாட்டை விட்டு அமெரிக்கா போக நினைப்பது மார்க்கிற்கும், தேவிக்கும் விருப்பமில்லை.

“இந்திரா நீ கல்வி பயின்றது நீ பிறந்த நாட்டில். அதை மறக்காதே. உன் திறமையை; காலம் சென்ற விஞ்ஞானி அப்துல் கலாமைப் போல் நாட்டுக்கு உபயோகி. ” என்று அடிக்கடி மார்க் மகனுக்கு சொல்லுவார்.

இந்திரனுக்கு தான் எதையும் புதுமையாகச் செய்யவேண்டும், எவர்களாலும் தீரத்து வைக்க முடியாத பிரச்சனைக்கு திர்வு காண வேண்டும், அதன் மூலம் பலரின் கவனத்தை பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அவன் ஒரு நிதி முதலீடு செய்யும் நிறுவனம் ஒன்றில் கணனி பகுதியில் வேலை கிடைத்து போன போது, அந்த நிறுவனம் வளருவதற்கு புதபு; புது புரோக்கிறாம்கள் அவசியம் என்பதை அறிந்தான். முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தமது பங்கு விபரததையும், பங்கு விலையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆன்லைன்னில தகவல் தளத்தில் பார்த்து, தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தான். பலர் அதனால் பணக்காரர்களானார்கள்.

இந்திரனின் வேலைத்திறமையை அறிந்த அவனது மனேஜர் சுரேஷ் பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர். நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பங்குகள் பற்றிய தகவல்களுக்கு, தகவற் தளத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்திரன் பல தடவை சுரேசுக்கு எடுத்துச் சொன்னான். அதற்கான புரொகிராமை உருவாக்குவது அவசியம் என்று அவன் சொல்லியும் அதிக செலவாகும் என்பதாலும் அந்த புரோகிராமை உருவாக்க கொம்பியூட்டர் செக்கியூரிட்டி துறையில் அனுபவம் வாயந்த ஒருவர் தேவை என்று மனேஜர் சொன்ன பதில் இந்திரனை திருப்தி படுத்தவில்லை.

வாடிக்கையாளர்களின் முதலீட்டு தகவல்களின் பாதுகாப்பு பற்றிய தனது அக்கறையை தனது பெற்றோரிடம் கலந்து பெசினான். ஆதற்கு அவர்கள் “இந்திரா உனது அக்கறையை எழுத்து மூலம் உன மனேஜருக்கு அறிவித்துவிடு. ஆதைபற்றி அவர் முடிவு எடுக்கட்டும். உனக்கு உன் திறமையைக் வெளிக்காட்ட நிட்சயம் சந்தர்ப்பம் வரும்.” என்றார்கள்.

******

ஒரு நாள் நிறுவனத்தின் துணைத்தலைவர் உடனடியாக தன்னை வந்து இந்திரனை சந்திக்கும் படி சொன்னார் என்றார் மனேஜர் சுரேஷ்.

இந்திரனும் மனேஜரும்; துணைத்தலைவரைப் போய் சந்தித்த போது அவர் சொன்னதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“ தலைவருக்கும், எனக்கும் கவலையைக் கொடுக்கும் சில முறைப்பாடுகள் எமது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது. தங்களது முதலீட்டு தகவல்களை யாரோ ஒருவர் களவாடுகிறார் போல் தெரிகிறது. அதோடு முன்பு மாதிரி சரியான தகவல்களை ஒன் லைனில் பெறமுடியாமல் இருக்கிறது என்பது தான் அவர்களின் முறைப்பாடு. நானும் உடனே ஒன்லைனில் எனது பங்குகளின விபரத்தை தேடியபோது பிழையான தகவல் கிடைத்தது. நான் நினைக்கிறேன் யாரோ ஒருவர் எங்கள் கொம்பியூட்டரின் பாதுகாப்பை மீறி வைரசை புகுத்தியிருக்கிறார்கள். இதற்கு எதாவது உடனடியாக செய்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் நிறுவனம் வெகுவாக பாதிப்படையும்” கவலையோடு துணைத்தலைவர் சொன்னார். தணைத்தலைவர் சொன்னதைக் கேட்டவுடன் சுரேஷ் இந்திரனைப் பார்த்தார்.

“ சேர் நான் இது எப்போதாவது ஒரு நாள் நடக்கும் என எதிர்பார்த்தனான். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதற்க வேண்டிய புரோகிறாமை நான் நேற்று எழுதிமுடித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்த பார்த்தால் தகவற் தளத்துக்குள் புகுந்த வைரஸை அழித்துவிடலாம். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாயளர்களின் தகவலகளுக்கு எது வித பாதிப்பும்; ஏற்படாது” என்றான் இந்திரன்.

“ அப்படியா? உடனடியாக நேரம் தாழ்த்தாது நீர் எழுதிய வைரஸை அழிக்கும் புரொகிறாமை டெஸ்ட் செய்யும். அதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயம் எங்கள் மூவருக்குள் மட்டுமே இருக்கட்டும். பலருக்கு எமது கொம்பியூட்டர் அமைப்பின் தகவற் தளத்துக்குள் வைரஸ் புகுந்துவிட்டது என்று தெரிந்தால் எமது நிறுவனத்தின பெயர் கெட்டு விடும். வாடிக்கையாளர்கள் பதட்டப்படுவார்கள். நான் தலைவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என அறிவிக்கிறேன்; “என்றார் துணைத்தலைவர்.

இவர்களின் சந்திப்பு நடந்து சில மணிநெரத்தில் தான் ஏற்கனவே எழுதிய வைரஸை அழித்து தகவல் தளததைப் பாதுகாக்கும் புரொகிறாமை கொம்பியூட்டரில் அப்லோட் எனப்படும் பதிவேற்றத்தை இந்திரன் செய்தான். தனது புராகிறாம் சரியாக வேலை செய்கிறதா என்று அறிய அதன் விளைவை டெஸ்ட் செய்தான்.

இந்திரனின் மனேஜர் சுரேசால் நம்பமுடியவில்லை. வைரஸ் அழிபட்டு விட்டது என்று மொனிட்டரில் பதில் வந்தது.

“ இந்திரா நீ உண்மையில் வெகு கெட்டிக்காரன். இந்த நிறுவனம் உனக்கு பதவி உயர்வு கொடுத்து சமபளத்தையும், சலுகைகளையும் கூட்டும் என்பது நிட்சயம்” என்றார் சுரேஷ்.

“ நன்றி சேர். இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு நான் உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்றான் இந்திரன். அவள் சொல்லி வாய் மூட முன் அவனது மொபைல் போன் அடித்தது.

போனில் பதிவாகி இருந்த நம்பரைக் கண்டவுடன் வீட்டில் இருந்து தனக்கு கோல் வந்திருக்கிறது என்பதை இந்திரன் அறிந்தான்.

“ யார் அம்மாவா பேசுகிறது’? இந்திரன் கேட்டான்

“ ஓம் அம்மா தான். இந்திரா நீ உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு புறப்பட்டு வர முடியுமா? அப்பா தீவிர சிகிச்சை பிரிவில் அட்ம்மிட் ஆகியிருக்கிறார். அவர் நிலமை மோசமாயிருக்கிறது என்கிறார்கள் டாகடர்கள். அவரை ஒருகு வைரஸ் தொற்று நோய்; பாதித்திருக்கலாம்” தேவியின் குரல் தளும்பியது

இந்திரனுக்கு தன வெற்றியை அடுத்து ஒரு கவலைப்படும் செயதி வந்ததை நம்ப முடியவில்லை.

இந்திரனின முகத்தில் ஏற்பட்டதிடீர் சோகத்தைக் கண்ட சுரேஷ், “ என்ன இந்திரன் எதாவது பிரச்சனையா”? என்று கேட்டார்.

“ ஓம் சேர். நான் உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு போகவேணும். அப்பாவுக்கு ஏதோ வைரஸ் இன்ஸ்பெக்சனாம்”.

“ என்ன வைரஸா. என்ன சொல்லுகிறீர் ” சுரேஷ் பதட்டத்தோடு கேட்டார்

“ ஆமாம் சேர் நான் இங்கை வைரஸை கொம்பியூட்டரிலை அழித்துவிட்டேன். டாக்டர்கள் உதவியோடு அப்பாவின் உடலில் உள்ள வைரஸ் இன்ஸ்பெக்சனை அழிக்க வேண்டும். கடவுள் தான துணைபுரிய வேண்டும்.;” என்றான் இந்திரன்.

“எப்படி அவருக்கு இன்ஸ்பெசன் வந்தது இநதிரன்”?;.

“அப்பா வேலை செய்வது இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில். அங்கிருந்துதான் வைரஸ் தொற்றியிருக்க வேண்டும் என நினைககிறேன்”, என்றான் இந்திரன்.

“நீர் உடனே ஹொஸ்பிடலுக்குப் போய் அப்பாவின் நிலமையைப் பாரும். நான் நடந்ததை துணைத் தலைவருக்குச் சொல்லுகிறன்” என்றார் சுரேஷ்

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா ) (8-Nov-16, 10:07 pm)
பார்வை : 223

மேலே