பிரிவு கண்ட மனம்
சிற்பமாய் கண்ட உன்னை
சிலை வடிக்க கல்தேடி
என் இதய பாறையில்
பதியல் கொண்டேன் உன்வழியே..!
சலனமற்ற நீரில் என்
மனம் சல்லடையாய் வழிய
உன் மனப் பாறையில்
என்னை அடைப்பது ஏன்னடி..!
தனிமையில் நானிங்கே செல்லும்
வழியெல்லாம் உன் பிரம்மை
என் நிழலாய் பின்தொடர
விழிக்கிறேன் கனவில் உன்னுடனே..!
அலை சேரும் என்கரையில்
உன் ராகம் பாட்டில்லையே
நான் இசைக்கும் காதலை
சேரடி முழுமதி காணலாம்..!