பொய்யான கோபங்கள்

ஊட்டிய சோற்றை
குழந்தை... தூ...தூ..வென‌
துப்பும்போது...ஒரு பொய்க்கோபம்...
அன்னைக்கு....

காதலி காதலனிடம்
சிணுங்கிக்கொண்டே
சிரிப்பது ஒருவகை ..பொய்க்கோபம்
காதலர்களுக்கு....

அப்பா..உள்ளே நுழையும்போதே
அம்மாவை..அசடு...அசடு என்று திட்டிக்கொண்டே
வருவதும்....பொய்க்கோபம்..
பெற்றோர்க்கு...

கண்ணாம்மூச்சி ஆட்டத்தில்
அதோ அவள் அங்குதான் ஒளிந்திருக்கிறாள்
என சொல்லிவிட்டாள்... விளையாடும்
இருவரும் காட்டுவதும் பொய்க்கோபம்..
மழலைகளுக்கு...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (9-Nov-16, 9:31 pm)
Tanglish : poiyaana kobangal
பார்வை : 193

மேலே